2017ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. விஜய் தேவரகொண்டா நடித்திருந்த இந்த படத்தை அறிமுக இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார். முதற்கட்டமாக இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட ‘கபீர் சிங்’ திரைப்படம் மாஸ் ஹிட் அடித்துள்ளது. ஷாஹித் கபூர், கீரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தமிழில் ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. 


தமிழ் ரீமேக்கில் விக்ரம் மகன் துருவ் விக்ரமும்,  அவருக்கு ஜோடியாக பனிதா சந்து நடித்தனர். கடந்த மாதம் 22ம் தேதி வெளியான இப்படம் துருவ் விக்ரமுற்கு நல்ல ஓப்பனிங்காக அமைந்தது. எக்கச்சக்க லிப் லாக், ஹாட் பெட்ரூம் சீன், காதில் கேட்க முடியாத அளவிற்கு கெட்ட வார்த்தைகள், புகைப்பிடிப்பது, குடிப்பது போன்ற சீன்கள் ஏராளமாக இருந்ததால் படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் கொடுக்கப்பட்டது. 

தெலுங்கு மற்றும் இந்தியில் அப்படிப்பட்ட வசனங்கள் இடம் பெற்றிருந்தாலும், தமிழில் அவை நீக்கப்பட்டன. மேலும் சில லிப் லாக் காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஆதித்யா வர்மா படத்தில் சென்சாரால் நீக்கப்பட்ட நெருக்கமான காட்சிகள் மற்றும் கெட்ட வார்த்தைகளை துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

ஒரு படத்தில் இவ்வளவு கெட்ட வார்த்தைகள் இருக்குமா? என்று ரசிகர்கள் வாய்பிளக்கும் அளவிற்கு எக்கச்சக்க கெட்ட வார்த்தைகளை பேசியுள்ளார் துருவ் விக்ரம். மேலும் வீடியோவில் பனிதா சந்துடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த வீடியோவை இதுவரை இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.