Asianet News TamilAsianet News Tamil

பாலா இயக்கத்தில் துருவ் நடித்த வர்மா படமும் ரிலீஸ்... சீயான் மகனுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு..!

முதலில் துருவ் விக்ரம் பாலா இயக்கத்தில் வர்மா என்றொரு படத்தில் நடித்து வந்தார். படமும் முழுவதுமாக முடிக்கப்பட்டு ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில் அது ட்ராப்  ஆனது. வேறு ஒரு இயக்குநரை வைத்து ஆதித்ய வர்மா படத்தை எடுத்து வெளியிட்டனர். 

Dhruv's Verma movie to release Bala
Author
Tamil Nadu, First Published Dec 12, 2019, 3:05 PM IST

படம் வெற்றியோ தோல்வியோ? தேர்ந்த நடிகர்களை உருவாக்கும் பயிற்சிப் பட்டறையாகவே இயக்குநர் பாலாவின் எல்லா படைப்புகளும் இருந்து இருக்கின்றன. விக்ரம் துவங்கி ஜிவி பிரகாஷ் வரைக்கும் அனைத்து நடிகர்களுக்கும் இது பொருந்தும். இன்று துருவ் நல்ல நடிகராக உருவாகி இருப்பதற்கு அவர் பாலாவின் பயிற்சிப்பட்டறையில் தயாரானதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

Dhruv's Verma movie to release Bala

துருவின் வெற்றிக்குப் பின்னால் கண்ணுக்குத் தெரியாமல் இயக்குநர். பாலாவின் உழைப்பு இருக்கும் என்றே நான் நம்புகிறேன் என்றேனும் ஒரு நாள் ஒரு நேர்காணலில், துருவ் இந்த உண்மையை தன்னியல்பாக சொல்வாரென்றே நான் எதிர்பார்க்கிறோம்’என பலரும் கருத்து சொல்லி வந்தனர். துருவ் விக்ரமின் நடிப்பை பாராட்டி வந்தனர்.

ஆதித்யா வர்மாவின் தயாரிப்பு செலவு 8 கோடி. வசூலானது 9.55 கோடி ரூபாய். இன்னும் பெரிய வசூலை வாரிக் குவிக்கும் என எதிர்பார்த்த ஆதித்ய வர்மாவின் படு மோசமான வசூல் துருவ் விக்ரமை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது. விட்டுப்போன படிப்பை முடித்து விட்டு வருகிறேன் என்று லண்டனுக்கு கிளம்பி போயிருக்கிறார்.Dhruv's Verma movie to release Bala

இருந்தாலும் தும்பை செடிய தொட்டு வணங்கினால் போதும் என ஒரு கூட்டம் அவரது சுற்றி சுற்றி வருகிறது. இதற்கிடையில் தனக்கு வர வேண்டிய பாக்கிக்காக ஒரு விபரீத முடிவை எடுத்திருக்கிறார் ஆதித்ய வர்மா, மற்றும் பாலாவின் வர்மா பட தயாரிப்பாளர். அதன்படி வர்மா படத்தையும் வெளியிடப் போகிறாராம். அது தியேட்டர்களில் அல்ல. அமேசான் டிஜிட்டல் தளத்தில். இதற்காக பெரும் தொகை ஒன்றை அமேசான் நிறுவனம் கொடுக்க முன் வந்திருக்கிறதாம். சேனல். கிட்டதட்ட பத்து கோடி நஷ்டத்தை முக்கால்வாசியாவது திருப்பிக் கொடுக்கும் என்று நம்புகிறார் இவர்.Dhruv's Verma movie to release Bala

பாலாவின் வர்மா படத்தை எடுக்க ஆன செலவும் ரூ.8 கோடி. ஆக 6.55 கோடி நஷ்டத்தை ஈடுகட்ட இந்த முடிவை எடுத்துள்ளது  இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம். ஆக மொத்தத்தில் ஒரே கதை கொண்ட இரண்டு படத்தில் நடித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் விக்ரமின் மகன் துருவ்.

Follow Us:
Download App:
  • android
  • ios