பிகினி ஆடை புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பாலிவுட் நடிகை திஷா படானி ரசிகர்கள் கண்களுக்கு விருந்து படைத்துள்ளார்.

பொறாமைப்படவைக்கும் கவர்ச்சியான உடல் அழகைக் கொண்ட திஷா படானி தனது உடல் அழகை பிகினி ஆடைகள் மூலம் வெளிக்காட்ட கூச்சப்படுவதில்லை அந்த வரிசையில் அவர் சிவப்பு நிற பிகினி ஆடையில் எடுக்கப்பட்ட தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 

மேக்கப் ஏதுமின்றி இயல்பான தோற்றத்தில் திஷா படானி நிற்கும் இந்தப் படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இணையதளத்தில் புயலாகப் பரவி வரும் இந்தப் படத்துக்கு இதுவரை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன. மேலும் விமர்சனங்களும் மழை போல பொழிந்து வருகின்றன. இதில் சுவாரசியமான தகவல் என்னவென்றால் திஷா படானி ஆண் நண்பன் என்று கூறப்படும் டைகர் ஷ்ராஃபின் சகோதரி கிருஷ்ணா ஷ்ராஃபும் லைக் செய்துள்ளார். 

திஷாப படானி அலி அப்பாஸ் ஜாஃபரின் பாரத் என்ற படத்தில் கயிறு வித்தைக் கலைஞரான ராதா என்ற கதாபாத்திரத்தில் சல்மான் கானின் ஜோடிகளில் ஒருவராக நடிக்கிறார். இந்தப் படத்தில் காத்ரின்னா கைஃப் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். தமிழில் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகவிருக்கும் சுந்தர் சியின் சங்கமித்ரா என்ற படத்திலுக் திஷா படானி நடிக்கவிருக்கிறார்.