பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தான் என்று 90 சதவிகித மக்களால் நம்பப்பட்ட தர்ஷன் நேற்று திடீரென வெளியேற்றப்பட்டது பார்வையாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அவரது வெளியேற்றத்தைக்கண்டு நிகழ்ச்சியில் உடன் இருந்தவர்களும் பார்வையாளர்களும் அழுதனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 99வது நாளை நெருங்கியுள்ளது. கடைசி வாரம் என்பதால் எலிமினேஷன் இருக்காது என்று அவ்னைவரும் நம்பிக்கொண்டிருந்த நிலையில் திடீரென கமல் அட்டையில் தர்ஷன் பெயரைக்காட்டி எலிமினேஷன் செய்தவுடன் உடன்பங்கு பெற்ற அனைவரும் அதிர்ச்சி அழுகை என்று தங்கள் உணர்ச்சிகளைக் கொட்டினர். சில நாட்களாக தர்ஷன் மீது பேரன்பு கொண்டிருந்த ஷெரின் கொஞ்சம் ஓவராகவே கண் கலங்கினார்.

பின்னர் சக போட்டியாளர்களிடம் கைகொடுத்து வெளியேறிய தர்ஷன் ‘பொதுவாகவே நான் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவன். கமல் சார்தான் என்னிடம் எல்லோரிடமும் நன்றாகப் பழக வேண்டும் என்று சொன்னார். நான் வெளியேறுவது குறித்துக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. முகேன் என்னுள்ளே இருக்கிறார். அவர்  வெற்றி பெற்றால்கூட நான் வெற்றி பெற்றதைப்போலவே சந்தோஷப்படுவேன்’என்று பெருந்தன்மையாகக் கூறி வெளியேறியபோது ஷெரின், சாண்டி, லாஸ்லியா, முகேன் ஆகியோர் கண் கலங்கி கட்டிப்பிடித்து விடைகொடுத்தனர். நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள் பலரும் தர்ஷனுக்காக கண்ணீர் விட்டு அழுதனர். இதற்கு முன் எந்தப் போட்டியாளர் வெளியேறியபோதும் இவ்வளவு நெகிழ்வாக இருந்ததே இல்லை.