Dharmathurai singer mathirchiyam bala post is changed

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கி, விஜய சேதுபதி நடித்து கடந்த வருடம் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படம் தர்மதுரை. இந்தப் படத்தில் 'மக்க கலங்குதப்பா' என்கிற பாடலை எழுதி பாடி நடித்திருந்தவர் ஆயுதபடை காவலர் மதிர்ச்சியம் பாலா. 

இவர் தற்போது மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு தேநீர் கொடுக்கும் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். 

மதுரை மாவட்டம் மதிச்சியத்தில், கலைக் குடும்பத்தில் பிறந்த இவர் ஆயுதப்படைக் காவலராக பணியாற்றிக்கொண்டே, தன்னுடைய குலத் தொழிலை விடாமல் பல கோவில் திருவிழாக்களில் கும்மிப் பாட்டு பாடி வந்தார்.

மதிச்சியம் பாலாவின் நிகழ்ச்சியை ஒரு முறை பார்த்த இயக்குனர் சீனு ராமசாமி, இவருடைய திறமையை வெளிக்கொண்டு வரும் விதத்தில், இவர் இயக்கிய தர்மதுரை படத்தில் ஒரு பாடலை எழுதிப் பாட இவருக்கு வாய்ப்பு கொடுத்தார். 

இவர் பாடி நடித்த முதல் படமான தர்மதுரையிலேயே இவர் திறமை பலராலும் பேசப்பட்டது... தன்னை ஆயுதப்படை காவலர் என்று பெருமையாக சொல்லிக் கொண்ட இவருக்கு தற்போது மாநகர காவல் ஆணையர் உணவு விடுதியில் வேலை வழங்கப்பட்டுள்ளது. இதனால் இவர் காலை முதல் இரவு வரை பணியில் இருந்து வரும் விருந்தினர்களுக்கு தேநீர் கொடுத்து வருவதால் இவரால் தொடர்ந்து பாட முடியாத சூழலும் உருவாகியுள்ளது. 

இது குறித்து அவரிடம் கேட்கையில், பாட வாய்ப்புகள் தற்போது வந்தாலும் அதற்காக தான் இப்போது செய்யும் அரசாங்க உத்தியோகத்தை விட்டு விட்டு வர முடியாது என தெளிவாக பதில் கூறுகிறார். 'பாஸ் நீங்க தெளிவா இருக்கீங்க பொழச்சிப்பீங்கனு தான் சொல்லத் தோணுது'