இவர் இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஆவார்.இந்தப் படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூப்பர்  ஸ்டார் ரஜினிகாந்த்கூட, ஹீரோ ஹரிஷ் கல்யாண், இயக்குநராக அறிமுகமாகும் சஞ்சய் பாரதியை வரவழைத்து ஆசி வழங்கியதுடன், 'தனுசு ராசி நேயர்களே' படத்தின் டீசர் மற்றும் மேக்கிங் ஸ்டைலையும் வெகுவாகப் பாராட்டினார். 

சூப்பர் ஸ்டார் ஆசி வழங்கிய நேரமோ என்னவோ, ஹரிஷ் கல்யாண் - சஞ்சய் பாரதி கூட்டணிக்கு செம்ம யோகம் அடித்துள்ளது. யெஸ், 'தனுசு ராசி நேயர்களே' படம் ரிலீசுக்கு முன்பே இவ்விருவரும் மீண்டும் புதிய படத்திற்காக இணைந்துள்ளனர். 

இந்தப் படத்தை, பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தயாரிக்கிறார். சஞ்சய் பாரதி சொன்ன ஒரு சூப்பர் நேச்சுரல் கதை அவருக்கு பிடித்துப்போக, தொடர்ச்சியாக காதல் கதைகளிலேயே நடித்துவரும் ஹரிஷ் கல்யாணிடம் இந்தக் கதையை தனஞ்செஜெயன் சொன்னாராம். 

அவரும் உடனடியாக தான் நடிக்கிறேன் என ஓகே சொல்லிவிட்டாராம். இதுபோதாதா என்ன! ஏற்கெனவே 'தனுசு ராசி நேயர்களே' படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளதால், சற்றும் யோசிக்காமல் ஹரிஷ் கல்யாண் - சஞ்சய் பாரதி கூட்டணியை புதிய படத்திற்கு கமிட் செய்துவிட்டாராம் தனஞ்செயன். 

சூப்பர் நேச்சுரல் திரில்லர் கதையுடன் ஹரிஷ் கல்யாண் - சஞ்சய் பாரதி மீண்டும் கூட்டணி சேர்ந்திருக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.