கொரோனா பாதிப்புக்குள்ளாகி மின்ட் வந்த ஐஸ்வர்யா மீண்டும் மருத்துவ மனையில் அட்மிட் ஆகியுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்..
சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா - தனுஷ் இருவரும் 18 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக்கொள்ள உள்ளதாக சமீபத்தில் ஒரே நேரத்தில் சமூகவலைத்தளம் மூலம் அறிவித்திருந்தனர்...முன்னதாக தனுஷ் மீது எழுந்த சந்தேகம் காரணமாக இருவரும் பிரியவுள்ளதாக ஊடகங்களில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. சின்ன சின்ன கருத்து வேறுபாடு பூதாகரமாக வெடிப்பதை அறிந்த ரஜினிகாந்த் தனது மகள் மருமகனை அழைத்து பேசியுள்ளார்..ஆனால் பல முறை அட்வைஸ் கொடுத்தான் வேலைக்காததால் மனமுவிவாகரத்து குறித்து சமீபத்தில் பேசியிருந்த ஐஸ்வர்யா காதல் டைந்துள்ளார் ரஜினி என்றும் சொல்லப்படுகிறது.
தனுஷ் -ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள் இருக்கையில் இருவரின் விவாகரத்து முடிவு தவறானது என பலரும் விமர்சித்து வருகின்றனர். பிள்ளைகளின் நிலையை கருத்தில் கொண்டே இரு வீட்டாரும் சமாதானம் பேசி பார்த்துள்ளனர். அதோடு நெருங்கிய நண்பர்கள் அட்வைஸ் செய்தும் பயனில்லையாம். இதையடுத்து தங்களது பணியில் கவனம் செலுத்த ஆரம்பித்த இருவரும் தனித்தனியாக ஐதராபாத் பயணித்தனர். தனுஷ் தெலுங்கு படமான வாத்தியில் கவனம் செலுத்த ..ஐஸ்வர்யா ரஜினிகாந்த ஆல்பம் பாடல் தயாரிப்பதில் கவனமாக இருந்தார்..

இதற்கிடையே மாறன் படத்தில் தனுஷ் பாடிய பாடல் வெளியானது. இந்த பாடலை ஐஸ்வர்யாவுக்கு காதல் சொல்லும் விதத்தில் தனுஷ் பாடியதாக கூறப்பட்டது. இதற்கிடையே ஐஷ்வர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.. பின்னர் கொரோனாவில் இருந்து விடப்பட்ட ஐஸ்வர்யா காதலர் தின ஆல்பம் சாங்கையும் வெளியிட்டார்..விவகாரத்தி குறித்து சமீபத்தில் பேசியிருந்த ஐஸ்வர்யா 'காதல் ஒருவருடன் நின்று விட கூடாது. நான் எனது பெற்றோர், குழந்தைகளை காதலிக்கிறேன் என கூறி தனது முடிவிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என உறுதி படுத்தியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு..பிக்பாஸ் ஆர்த்தியின் கணவர் தப்பி ஓட்டம்? வலைவீசி தேடும் போலீசார்..
இந்நிலையில் மீண்டும் ஐஸ்வர்யா மருத்துவமனையில் மாத்திக்கப்பட்டுள்ளார்..இது குறித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா . அதில் பெண் மருத்துவருடன் ஐஸ்வர்யா இருக்கும் படத்துடன் ' கோவிட்க்கு முந்தைய வாழ்க்கை மற்றும் கோவிட்க்கு பிந்தைய வாழ்க்கை ... மீண்டும் மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் தலைச்சுற்றலுடன் என குறிப்பிட்டுள்ளார்.
