பிரபல நகைசுவை நடிகையான ஆர்த்தியின் கணவர் கணேஷ்கர்.. நேற்று இரவு கார் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
சன்டிவியில் ஒளிபரப்பான சூப்பர்10 மற்றும் வியாஜ்ஜிய டிவி லொள்ளு சபா ஆகிய தொலைக்காட்சிகளில் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் அறியப்பட்டவர் ஆர்த்தி. இவர் தொலைக்காட்சி ராக பணியாற்றியுள்ளார்.அதோடு தமிழ் மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் பணியாற்றியுள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான ஆர்த்தி கிரி, படிக்கடவன் மற்றும் குட்டி உள்ளிட்ட திரைப்படங்களுடன் நடித்து அசத்தியிருந்தார். இந்த படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியமைக்காக ஆனந்த விகடனின் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான விருதுகளை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வென்றார். அதைத் தொடர்ந்து "கோலிவுட்டின் மிகவும் விரும்பப்பட்ட நகைச்சுவை நடிகை" என்று விவரிக்கப்பட்டார் ஆர்த்தி..சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது அவருக்கு வழங்கப்பட்டது.
படங்களில் தோன்றுவது குறையவே கடந்த 2017 ஆம் ஆண்டில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தமிழ் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆர்த்தி பங்கேற்றார் .

இதற்கிடையே தனது சிறு வயது நண்பரான கணேஷ்கரை கடந்த 2009 ஆம் ஆண்டு மணந்து கொண்டார்.முன்னதாக மானாட மயிலாட என்ற ரியாலிட்டி டான்ஸ் ஷோவின் போது நடன பார்ட்னர்களாக இருந்த இவர்கள் குருவாயூரில் திருமணம் முடித்தனர். இருவரும் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ஆர்த்தியின் கணவர் கணேஷ்கற் நேற்று இரவு கார் விபத்தை ஏற்படுத்தியுள்ளார். பட்டினப்பாக்கம் லூப் சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த கணேஷ்..அங்குள்ள தடுப்பு சுவரில் வேகமாக இடித்துள்ளார். திடீரென கார் வேக கட்டுப்பாட்டை இழந்து மோதியதை தொடர்ந்து பின்னால் வந்த இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளாகி அதை ஓட்டிவந்த இளைஞருக்கு படு காயம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு மக்கள் அவ்விடத்தில் கூடவும் பதட்டமடைந்த கணேஷ் அந்த இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளார். இது குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார் கணேஷை தேடி வந்துள்ளனர். இது குறித்து ஆர்த்தியிடம் விசாரித்த போது கணேஷ் வீட்டிற்கு வரவில்லை என அவர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தலைமறைவாகியுள்ள கணேஷ்கரை போலீசார் வலைவீசி தேடுவருவதாக சொல்லப்படுகிறது.
