சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள, 'பேட்ட' திரைப்படம்,  ரஜினி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தில் நடித்துள்ள திரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி,  பாபி சிம்ஹா,  நவாசுதீன் சித்திக், சசிகுமார், ஆகியோர் நடிப்பும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் 'பேட்ட' திரைப்படம் வெளியான இதே தினத்தில், தல அஜித் நடித்துள்ள விசுவாசம் திரைப்படமும் வெளியாகியுள்ளதால், இரு தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் ஒரு சில பிரச்சனைகள் வந்து ஓய்ந்தது.

இந்நிலையில், இன்று வெறியான 'பேட்ட' படத்தை ரசிகர்களோடு ரஜினியின் குடும்பம் பார்த்துள்ளனர்.  சென்னை ரோகிணி தியேட்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் அவருடைய மருமகன் தனுஷ் ,படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ள திரிஷா ஆகியோர் ரசிகர்களுடன் ரசிகர்களாக அமர்ந்து இந்த படத்தை பார்த்துள்ளனர்.  இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.