துரை செந்தில்குமார் இயக்கத்தில் "பட்டாஸ்" படத்தில் நடித்து முடித்த தனுஷ், அதே வேகத்தோடு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் "D40" படத்திலும் நடித்து முடித்துவிட்டார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்ட நிலையில், பிளாஷ்பேக் காட்சிகள் மட்டும் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் படமாக்கபட்டது. 

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தனுஷ், "என் நடிப்பில் வேகமாக எடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. கார்த்திக் சுப்புராஜ் போன்ற வேகமான, தொலைநோக்கு திறன் கொண்ட இயக்குநர் உடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே மதுரையில் ஷூட்டிங் முடிந்த கையோடு, அதே கெட்டப்பில் பழனி கிளம்பிய தனுஷ். தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகன்கள் யாத்ரா, லிங்கா உடன் பழனி முருகனை தரிசித்துள்ளார். இதற்காக தனுஷ் குடும்பத்துடன் ரோப் காரில் பயணிக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.