dhanush visit padaiveerm shooting spot

இயக்குனர் தனா இயக்கத்தில் பாடகர் விஜய் ஜேசுதாஸ் முதல் முறையாக தமிழில் கதாநாயகனாக அறிமுகம் கொடுக்கும் திரைப்படம் படை வீரன். இந்தப் படத்தை தயாரிப்பாளர் மதிவாணன் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜா நடித்துள்ளார்.

இயக்குனர் மணிரத்னம் உதவியாளர் தனா இயக்கும் படைவீரன் படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு இன்று இங்கு திடீர் என நடிகர் தனுஷ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

முன்னதாக படைவீரன் படத்தை பிரத்தியேகமாக தனுஷிற்காக படக்குழுவினர் போட்டுக் காட்டியுள்ளனர். படம் தனுஷிற்கு மிகவும் பிடித்திருந்ததால் அவர் படைவீரன் படத்திற்காக கார்த்திக் ராஜா இசையில், ப்ரியன் வரிகளில் உருவான "லோக்கல் சரக்கா பாரின் சரக்கா... ஊத்திக்குடிச்சா எல்லாம் ஒன்னுடா... " எனத் தொடங்கும் பாடலை தனுஷ் பாடி கொடுக்க, படம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தனுஷ் பாடிய பாடலை காட்சிப்படுத்தி படக்குழுவினர் படத்தை நிறைவு செய்துள்ளனர்.

படப்பிடிப்பிற்கு நேரில் வந்த தனுஷ் பாடல் படமாக்கப்பட்ட விதத்தை மிகவும் பாராட்டினார். படைவீரன் படம் அடுத்த மாதம் வெளியாகிறது.