Asianet News TamilAsianet News Tamil

நம் மண்ணை சேர்ந்தவர் திறமையை அடையாளம் கண்டு உலகிற்கு காண்பித்ததற்கு நன்றி! தனுஷின் வைரல் ட்விட்!

இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்ற பாடல் பிப்ரவரி 18 ஆம் தேதி வெளியாகியது. இந்த பாடல் வெளியானதில் இருந்து, இந்த பாடலை பாடிய நாட்டுப்புற பாடகி மாரியம்மாளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

dhanush twit for karnan movie singer mariyammal
Author
Chennai, First Published Feb 24, 2021, 10:33 AM IST

“பரியோறும் பெருமாள்” படம் மூலமாக ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த மாரிசெல்வராஜ் உடன் தனுஷ் இணைந்துள்ள திரைப்படம் கர்ணன். இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங்கின் கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதியுடன் நிறைவடைந்தது. அடுத்தடுத்து படங்களில் காமிட்டாகியுள்ளதால் படு பிசியாக இருக்கும் தனுஷ், கையோடு கர்ணன் டப்பிங் பணிகளையும் முடித்து கொடுத்துவிட்டதாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு புகைப்படத்துடன் ட்விட்டரில் அறிவித்திருந்தார்.

dhanush twit for karnan movie singer mariyammal

மேலும் செய்திகள்: இந்த விஷயத்தில் ஹீரோயின்களையே மிஞ்சிய 'குக் வித் கோமாளி' ஷிவாங்கி! குவியும் வாழ்த்து..!
 

படத்தின் டீசர், டிரெய்லர் போன்ற அப்டேட்களை எதிர்பார்த்து தனுஷ் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி அன்று, கர்ணன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. முகத்தில் ரத்தம் வழிய, கையில் விலங்குடனும் கண்ணில் கனல் தெறிக்கும் கோபத்துடனும் நிற்கும் தனுஷின் கர்ணன் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலானது. அத்துடன் படத்தை ஏப்ரல் 9ம் தேதி வெளியிட உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. 

dhanush twit for karnan movie singer mariyammal

மேலும் செய்திகள்:கண்ணீர் விட்டு கதறிய வடிவேலு... அடித்தது ஜாக்பாட்! இனி காமெடி சரவெடித்தான்..!
 

இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்ற பாடல் பிப்ரவரி 18 ஆம் தேதி வெளியாகியது. இந்த பாடல் வெளியானதில் இருந்து, இந்த பாடலை பாடிய நாட்டுப்புற பாடகி மாரியம்மாளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த பாடல் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ள நிலையில், தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "இன்னும் நிறைய வர இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியும். எங்கள் மண்ணை சேர்ந்த, ஒருவரின் தகுதியான திறமைகளை அடையாளம் கண்டு அவற்றை உலகிற்கு காண்பித்ததற்கு நன்றி. கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும். என ட்விட் செய்துள்ளார்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios