இட்ஸ் அவதார் தினம்: நடிகர் தனுஷ் டுவீட்!
உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியாகியுள்ள அவதார் படத்தின் 2ஆம் பாகம் குறித்து நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் இட்ஸ் அவதார் டே என்று பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படம் அவதார் 2: தி வே ஆஃப் வாட்டர். உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஏற்கனவே சிறப்பு காட்சிகள் பார்த்த பிரபலங்கள் இந்தப் படத்தை வியந்து பாராட்டி வருகின்றனர்.
இந்தியாவில் தமிழ்,தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இந்தப் படம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் முன்பதிவில் மட்டும் ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்னதாக கேஜிஎஃப் 2, ஆர் ஆர் ஆர், பிரம்மாஸ்திரா மற்றும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் ஆகிய படங்கள் முதல் நாள் புக்கிங்களில் அதிக வசூல் செய்த படங்களாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் இது அவதாரம் தினம் என்று பதிவிட்டு, அவதாரம் படம் வெளியானதை குறிப்பிட்டு காட்டியுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2009 ஆம் ஆண்டு அவதார் படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இந்தப் படம் 292 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.
25 ஆண்டுகளுக்கு பின் அதே நாள்... 'இந்தியன் 2' கெட்டப்பில் கமல் பகிர்ந்த அரிய புகைப்படம் வைரல்!