Thiruchitrambalam : திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதற்கு இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ள உதயநிதி தான் காரணமாம். 

நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் திருச்சிற்றம்பலம். யாரடி நீ மோகினி, குட்டி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர் தான் இந்த படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.

திருச்சிற்றம்பலம் படத்துக்கு அனிருத் இசையமைத்து உள்ளார். தங்கமகன் படத்துக்கு பின்னர் இணைந்து பணியாற்றாமல் இருந்து வந்த தனுஷ் - அனிருத் காம்போ இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளதால், இப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் தனுஷ் உணவு டெலிவரி செய்யும் பையனாக நடித்துள்ளார். இப்படத்தை முதலில் ஜூலை 1-ந் தேதி தான் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு ஆகஸ்ட் 18-ந் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Scroll to load tweet…

திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதற்கு உதயநிதி தான் காரணமாம். ஏனெனில் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் கைப்பற்றி உள்ளது. ஜூலை 1-ந் தேதி வெளியாக உள்ள மாதவனின் ராக்கெட்ரி படத்தையும் அந்நிறுவனம் வெளியிட உள்ளதால், தனுஷ் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... அங்க காஷ்மீர் பண்டிட்களுக்கு நடந்தது தான்... இங்க இஸ்லாமியர்களுக்கும் நடந்திருக்கு- புயலை கிளப்பிய சாய் பல்லவி