மாறன் ஹீரோ இன்ட்ரோ பாடலை நடிகர் தனுஷ் ராப் மாடலில் படியுள்ளதாக இசையமைப்பாளர் ஜீ வி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் அறிமுகமாகும் போது, பல்வேறு விமர்சனங்களை பெற்ற தனுஷ், இன்று பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு, பாலிவுட், ஹாலிவுட் என நடித்து அசுர வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறார். ஓவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து, தன்னுடைய அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
எனவே இவர் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. தன்னுடைய திறமையை நடிப்போடு நிறுத்தி கொள்ளாமல்... நடிப்பை தாண்டி, பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர் என பிஸியாகவே வலம் வருகிறார்.
தற்போது இவர் கைவசம் மாறன், திருச்சிற்றம்பலம் ஆகிய தமிழ் படங்களும், அட்ரங்கி ரே என்கிற பாலிவுட் படமும், தி கிரே மேன் என்கிற ஹாலிவுட் படமும் உள்ளது. இவற்றுள் மாறன், அட்ரங்கி ரே, தி கிரே மேன் ஆகிய 3 படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ளன. 
இதில் மாறன் படத்தை ‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் சிறந்த இயக்குனராக அனைவராலும் அறியப்பட்டவர் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். பேட்ட, மாஸ்டர் படங்களை தொடர்ந்து அவர் நடிக்கும் மூன்றாவது தமிழ்படம் இதுவாகும்.

மேலும் இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், கேகே, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.
இந்நிலையில் மாறன் படத்தின் முதல் பாடல் குறித்து இசையமைப்பாளர் ஜீ வி பிரகாஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் அப்டேட் கொடுத்துள்ளார். அதில் முதல் பாடலை தனுஷ் ராப் முறையில் படியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
