வடசென்னை வெற்றியைத் தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் அசுரன். 

இந்தப் படத்திற்கு வெற்றிமாறனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான அசுரன் திரைப்படம், பாக்ஸ் ஆஃபிசை கலக்கி வசூல்வேட்டை நடத்தி வருகிறது. 

அசுரனின் அசுர வெற்றிக்கு ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும், பாடலும் மிகப்பெரிய பலமாகும். 

இது, நடிகராக வலம்வரும் ஜிவி பிரகாஷுக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்நிலையில், அசுரன் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பொல்லாத பூமி பாடலின் வீடியோ, நாளை (அக். 27)தீபாவளி அன்று வெளியிடப்படவுள்ளதாக ஜிவி பிரகாஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.