Dhanush : கண்கள் உன்னைத் தேடுது மானே-னு ஐஸ்வர்யாவிடம் உருகிய தனுஷ்... வீடியோவை பார்த்து மனமுடைந்த ரசிகர்கள்
‘கண்கள் உன்னைத் தேடுது மானே’ என பாடியபடி ஐஸ்வர்யாவை தனுஷ் கட்டிப்பிடிக்க, வெட்கத்தில் ஐஸ்வர்யா சிரிக்கும் படியான காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன.
நடிகர் தனுஷுக்கும், ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணமானது. இத்தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில், நேற்று இரவு இருவரும் அறிக்கை வெளியிட்டு விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.
தனுஷின் இந்த எதிர்பாரா அறிவிப்பு சமூக வலைதளங்களை அதிர வைத்தது. ரசிகர்கள் அனைவரும் ஏன் இந்த முடிவு, தயவு செய்து மீண்டும் சேர்ந்து விடுங்கள் என தனுஷுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். தனுஷின் விவாகரத்து முடிவை அடுத்து, அவர் ஐஸ்வர்யாவுக்காக ரொமாண்டிக் பாடல் பாடி, அவருடன் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ரஜினியின் பேட்ட படத்தில் இடம்பெறும் ‘இளமை திரும்புதே’ பாடலை பாடுகிறார் தனுஷ். அதில் குறிப்பாக ‘கண்கள் உன்னைத் தேடுது மானே’ என பாடியபடி ஐஸ்வர்யாவை தனுஷ் கட்டிப்பிடிக்க, வெட்கத்தில் ஐஸ்வர்யா சிரிக்கும் படியான காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன.
"
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ கடந்தாண்டு தனுஷ் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்டது. அதில் கூட இருவரும் மனதில் காதலுடன் சந்தோஷமாக இருந்த நிலையில், தற்போது திடீரென விவாகரத்து செய்தது ஏன் என்பது ரசிகர்களுக்கு புரியாத புதிராக உள்ளது.