இந்த படத்தில் சண்டையிடுவதற்காக நடிகர் தனுஷ் சிக்ஸ்பேக் வைத்தார். 

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ், சாய்பல்லவி, நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாரி 2'. இதில் நடிகை வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். குறிப்பாக தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடனமாடிய “ரவுடி பேபி” பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டடித்த அந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார். இவர்களின் சூப்பர் காம்போ ... அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

 அதே போல் மாரி 2 படத்தில் இடம்பெற்றிருந்த மற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்நிலையில் ஏற்கனவே ரவுடி பேபி பாடல், உலக அளவில் அதிக பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த நிலையில், தற்போது மேலும் மற்றொரு சாதனையை படைத்துள்ளது. அதாவது இதுவரை 800 மில்லியன் பார்வை பெற்று 3 மில்லியன் லைக்குகளை தாண்டி வருகிறது. 

பாடல் ஹிட்டடித்த அளவிற்கு படம் பெரிதாக பேசப்படவில்லை. இந்த படத்தில் சண்டையிடுவதற்காக நடிகர் தனுஷ் சிக்ஸ்பேக் வைத்தார். படம் வெளியான புதிதில் அது கிராபிக்ஸ் என சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்தனர். இந்நிலையில் மாரி 2 படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்காக தனுஷ் தயாராகும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் தனுஷின் ரியல் சிக்ஸ்பேக்கை பார்த்து வதந்தி பரப்பிய நெட்டிசன்கள் பலரும் வாயடைத்து போயுள்ளனர். இதோ அந்த வீடியோ...

Scroll to load tweet…