துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பட்டாஸ்'. தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், சினேகா, மெஹரின் பிர்சடா ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடிக்கின்றனர். 'புதுப்பேட்டை' படத்திற்குப் பிறகு, தனுஷுடன் சினேகா இணைந்திருக்கும் படம் இது. 'விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து, சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மிகபிரம்மாண்டமாக உருவாகும் 'பட்டாஸ்' படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, விவேக்-மெர்வின் இசையமைக்கின்றனர். 

அந்தப் படத்தில் தனுஷ் பாடியிருக்கும் "ச்சில் ப்ரோ" என்ற பாடல் 3 நாட்களுக்கு  முன்பு வெளியாகி ட்விட்டர் மற்றும் யூ-டியூப்பில் ட்ரெண்டிங்கில் வெறித்தனம் காட்டியது.2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பட்டாஸ் படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக படப்பிடிப்பை அசுர வேகத்தில் நடத்தி முடித்துள்ளது. படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததை கொண்டாடும் விதமாக தனுஷ், இயக்குநர் துரை செந்தில்குமார் உட்பட மொத்த படக்குழுவும் கேக் வெட்டி செம்ம கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அந்த கொண்டாட்டத்தின் போது மொத்த படக்குழுவும் எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஷூட்டிங் நிறைவடைந்ததை அடுத்து போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக  ஈடுபட உள்ளது. முதற்கட்டமாக தனுஷின் டப்பிங் பணிகள் நிறைவடையும் என்றும், அதன் பின்னரே அடுத்த படத்திற்கான ஷூட்டிங் வேலைகளில் அவர் இறங்குவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததை அடுத்து மாஸ் அப்டேட் வெளியாகும் என தனுஷ் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.