இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில். தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் 'பட்டாஸ்'. இந்த திரைப்படம் பொங்கல் விருந்தாக இன்று ரிலீஸாகியுள்ளது. தியேட்டர்களில் பர்ஸ்ட் டே, பர்ஸ்ட் ஷோவைக் காண வந்திருந்த தனுஷ் ரசிகர்கள் மரண மாஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த படத்தில் நடிகை சினேகா அப்பா தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.மகன் தனுஷுக்கு ஜோடியாக நடிகை, மெஹரின் பிரிசண்டா நடித்துள்ளார். புதுப்பேட்டை படத்திற்கு பின்,  தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்திருக்கும் இந்த படத்தை, சத்யஜோதி பிலிம்ஸ் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

முன்னாடி எல்லாம் ரசிகர்களின் கொண்டாட்டம் முடிந்த பிறகே, மக்கள் படம் பார்க்க செல்வார்கள். அதன் பின்னர் தான் படம் மொக்கையா?, சூப்பரா? என்ற தகவல்கள் வெளியாகும். ஆனால் இப்ப இருக்குற இன்டர்நெட் காலத்தில் 4 ஜிபி டேட்டாவை விட வேகமாக படம் குறைத்த ரிவ்யூக்கள் சோசியல் மீடியாவில் அப்டேட் ஆகிவிடுகிறது. 

அப்படி இன்று வெளியகியுள்ள தனுஷின் பட்டாஸ் படம் குறித்த கமெண்ட்ஸ்கள் டுவிட்டரை வேற லெவலில் திணறடித்துள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது வெளியான பேட்ட, விஸ்வாசம் படங்களைப் போல் பட்டாஸ் திரைப்படம் மாஸாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

பர்ஸ்ட் ஆப் தாறுமாறாக இருப்பதாகவும் அப்பா தனுஷின் கேரக்டர் சூப்பர் என்றும் கூறப்படுகிறது. அதேபோல சினேகாவின் அசத்தல் நடிப்பு ரசிகர்களை ஈர்த்துள்ளது. செகன்ட் ஆப் சூப்பராக இருப்பதாகவும், கிளைமேக்ஸ் காட்சிகளை இன்னும் கொஞ்சம் பேட்டராக எடுத்திருந்தால் அடி தூள் லெவலுக்கு இருந்திருக்கும் என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாடல்களைப் பொறுத்தவரை ச்சில் ப்ரோ, முரட்டு தமிழன்டா பாடல்கள் வரும் போது தியேட்டர்களில் பட்டாஸ் வெடிக்கிறது. அதேபோல் கடைசி 20 நிமிட காட்சிகள் படத்திற்கு பலம் சேர்த்துள்ளதாக ரசிகர்கள் ட்வீட் செய்துள்ளனர்.

கிளைமேக்ஸில் வரும் அப்பா திரவிய பெருமாள் கேரக்டரில் தனுஷ் 100 சதவீதம் ஸ்கோர் செய்துள்ளது தெரிகிறது. சின்ன பையன் லுக்கில் சக்தியாக வந்து அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டியுள்ளதாகவும் ரசிகர்கள் ட்வீட்டர் கமெண்ட்கள் தாறுமாறாக வெடிக்கிறது.