மதுரை மேலூரை சேர்ந்த தம்பதிகள் கதிரேசன் மற்றும் மீனாட்சி ஆகியோர், நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும் அவர் 15 வயதில் தொலைந்து விட்டதாகவும், இவர் தற்போது கஸ்தூரி ராஜாவின் வசம் சேர்ந்து பெரிய நடிகராக மாறிவிட்டார் என்றும், இதனால் உணமையான பெற்றோரான தங்களுக்கு தனுஷ் மாதம்தோறும் வாழ்க்கைக்கான செலவு தொகை வழங்க வேண்டும் என்று கூறி வழக்கு தொடர்ந்தனர். 

பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கை ஏற்கனவே மதுரை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. 

இந்த வழக்கு தொடர்பாக, தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு மற்றும் கல்விச் சான்றுகள் போலியானவை என்று கூறி கதிரேசன் தம்பதிகள் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கும் தள்ளுபடி செய்தது நீதிமன்றம். 

இந்த நிலையில் கதிரேசன் தம்பதிகள் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் மதுரை கோ.புதூர் காவல் நிலையம் மற்றும் மதுரை போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் அளித்த புகாரின் பேரில் தனுஷ் மீது வழக்குபதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.