நடிகர் தனுஷ் இன்று 35வது பிறந்த நாளை கொண்டாடுவதை முன்னிட்டு, இவருக்கு ரசிகர்களும் பிரபலங்கள் பலரும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

நடிகர் தனுஷ் பிறந்தநாளை தமிழகத்தின் அணைத்து பகுதிகளிலும் உள்ள தனுஷ் ரசிகர்கள் மிகவும் விமர்சியாக போஸ்டர் அடித்து ஒட்டியும், அன்னதாம் செய்தும், கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் நடிகர் தனுஷும் ரசிகர்களை மகழ்ச்சியாக்கும் வகையில், இன்று மாலை வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது நடித்திருக்கும் ‘வடசென்னை’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட முடிவு செய்துள்ளார். 

இந்நிலையில் சில ரசிகர்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ஒரு போட்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டரில் தனுஷ், மைக் முன்பு பேசுவது போலவும், பக்கத்தில் வருங்கால தமிழக முதல்வரே என்று அச்சிடப் பட்டுள்ளது. மேலும் இதில் ரஜினியின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.