கடந்த ஆண்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து, 'பேட்ட ' படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்தி சுப்புராஜ், அந்த படத்திற்கு பின், தற்போது சூப்பர் ஸ்டாரின் மருமகன், தனுஷை வைத்து, 'ஜகமே தந்திரம்' என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தை 'Y Not Studios ' நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.

குறிப்பாக தலைவர் எப்படி 'பேட்ட' படத்தில் முறுக்கு மீசையோடு வந்தோரோ... அதே கெட்டப்பில், தனுஷும் இந்த படத்தில் ரௌண்டு கட்டி நடித்திருக்கிறார்.

’ஜகமே தந்திரம்’  திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், படத்தின் ரீஸுக்கு முட்டுக்கட்டை போட்டு விட்டது, கொரோனா தொற்று.

மேலும் செய்திகள்:  மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் 'தொழிலாளர் அணியின் சின்னத்தை' வெளியிட்ட கமல்!
 

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்து அறிவித்து புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

விரைவில் ‘ஜகமே தந்திரம்’ படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் நடைபெற்று வந்த இந்த படத்தின் சவுண்ட் மிக்சிங் பணிகள், கொரோனா பீதி அடங்கிய பின், முடிக்கப்பட்டு  முடிந்தவரை படத்தை உடனடியாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் செய்திகள்:  அஜித்தை கட்டிப்பிடித்திருக்கும் விஜய்..! சோசியல் மீடியாவை தெறிக்க விடும் தல - தளபதி போஸ்டர்ஸ்!
 

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், உள்பட பலர் நடித்துள்ளனர்.  சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.