உழைப்பாளர் தினம்:

வருடம் 365 நாளும் உழைக்கும்  உழைப்பாளர்களை, பெருமை படுத்தும் விதமாக, எவ்வித பாகுபாடும் இன்றி, இந்தியாவில் உள்ள அனைவராலும், மே - 1 ஆம் தேதி அன்று, உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தினத்தை சிறப்பிக்கும் விதமாக, சமூக வலைத்தளங்களில் குடியரசு தலைவர், பிரதமர், அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள்  என அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

கமல்ஹாசன் ட்விட்

மேலும் செய்திகள்: தமிழ் பிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் மாற்றமா? போட்டியாளர்கள் பற்றி வெளியே கசிந்த தகவல்!
 

அந்த வகையில், பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான, நடிகர் கமலஹாசன் மே தின வாழ்த்துக்கள் கூறி இன்று காலை தன்னுடைய சார்பாக அணைத்து தொழிலாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து  ட்விட் செய்திருந்தார். 

 நாட்டின் பொருளாதாரத்தை கட்டமைத்திடும் ஒவ்வொரு தொழிலாளியின், தனி பொருளாதாரமும் பலப்பட வாழ்த்துகிறேன். உழைப்பை மூலதனமாக்கி உயரும் வாழ்வு தாமதமாகலாம், தடைபடாது. இந்நிலை மாறும், தொழிலாளர் வாழ்வு ஏற்றம் பெறும். நம்பிக்கையுடன்.. என்று கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்: அஜித்தை கட்டிப்பிடித்திருக்கும் விஜய்..! சோசியல் மீடியாவை தெறிக்க விடும் தல - தளபதி போஸ்டர்ஸ்!
 

இவரின் இந்த கருத்துக்கு பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்திருந்தனர். இதை தொடர்ந்து, தொழிலாளர் தினத்தை மேலும் சிறப்பிக்கும் விதமாக, தன்னுடைய கட்சியின் சார்பில் , 'தொழிலாளர் அணியின் சின்னத்தை வெளியிட்டுள்ளார்'.

இதில்  " நம்முலகை கட்டமைத்திடும்  தொழிலாளர்கள் கொண்டாடும்  தொழிலாளர் தினத்தன்று, ”மக்கள் நீதி மய்யத்தின்”  @maiamofficial  கட்சியின் “தொழிலாளர் அணியின் சின்னத்தை” வெளியிடுவதில் பெருமகிழ்வடைகிறோம்.

உழைப்பை அங்கீகரிப்போம்! தொழிலாளர்களை கொண்டாடுவோம்! என தெரிவித்துள்ளார்.

தற்போது கமல் வெளியிட்டுள்ள தொழிலாளர் அணியின் சின்னம் இதோ...