dhanush madurai parents give the another case for dna testing

பிரபல நடிகர் தனுஷை தனது மகன் என்று கூறி மதுரையை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்பதும், இந்த வழக்கின் விசாரணைக்காக நேற்று முன் தினம் தனுஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜரானார்.

அப்போது தனுஷின் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் நேற்று கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் மேலும் ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். 

இந்த மனுவில் நடிகர் தனுஷ்க்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கதிரேசன் - மீனாட்சி தம்பதியரின் இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தனுஷின் அங்க அடையாளங்கள் குறித்த அறிக்கையும் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கூறப்படுகிறது. என்ன நடக்கிறது உண்மை என்ன என்று சீக்கிரம் வெளியில் வரும்.