மாறனைப் பார்த்த திரையுலக ஆர்வலர்கள் அதற்கு ஒரு தம்ஸ்-அப் கொடுத்துள்ளனர் மற்றும் கவர்ச்சியான இசை மற்றும் ஒளிப்பதிவு ஆகியவற்றுடன் அதன் புதிரான கதைக்களத்திற்காக அதைப் பாராட்டியுள்ளனர்.

தனுஷின் ஓடிடி ரிலீஸ் :

பிரபல நடிகராக வலம் வரும் தனுஷின் சமீபத்திய படங்கள் ஓடிடியில் வெளியாவது. இது மூன்றாவது முறை. ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் இணையதளம் வாயிலாக வெளியாகியது. ஆனால் இந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை. அதே போல பாலிவுட் படமான கலாட்டா கல்யாணம் வந்த சுவடு தெரியவில்லை.

அடுத்ததாக மாறன் :

பாலிவுட், ஹாலிவுட் என கொடிகட்டி பறக்கும் தனுஷின் அடுத்த தமிழ் உருவாக்கம் மாறன். துருவங்கள் பதினாறு படத்தையோ இயக்கிய கார்த்திக் நரேன் தனுஷின் மாறனை இயக்கியுள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு... ஓடிடி-யில் வெளியான மாறன்... வருத்தத்தில் ரசிகர்கள்

மாறனுடன் மாஸ்டர் நாயகி : 

பேட்டை, மாஸ்டர் படங்களை தொடர்ந்து தற்போது மாறனில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், கேகே, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஹிட் அடித்த சிங்கிள்ஸ் :

ஜிவி பிரகாஷ் இசையில் மிளிரும் இந்த படத்திலிருந்து வெளியான சிஸ்டர் செண்டிமெண்ட் சாங், டைட்டில் சாங் உள்ளிட்டவை நல்ல ஹிட் கொடுத்தது. இதையடுத்து சமீபத்தில் வெளியான சிட்டுக்குருவி பாடலை தனுஷ் தனது எழுதி பாடியிருந்தார். இந்த பாடல் ரசிகர் மத்தியில் ஆதரவு பெற்றது.

ஹாட் ஸ்டாரின் வெளியான மாறன் :

இன்று மாலை 5 மணிக்கு தனுஷின் மாறன் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரின் வெளியாகியது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும். தனுஷ் படத்தை திரையரங்குகளில் கொண்டாட முடியவில்லை என்கிற கவலையில் ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு... Maaran movie : மாறன் படத்தை கண்டுகொள்ளாத தனுஷ்... புறக்கணிப்பின் பின்னணி என்ன?

நெட்டிசன்கள் விமர்சனம் : 

நெட்டிசன்கள் தனுஷின் நடிப்பைப் பற்றி விவாதித்து வருகின்றனர். மாறன் தனுஷ் ஒரு இளம் பத்திரிகையாளராக நடிக்கிறார், அவர் மிகவும் போற்றப்படும் ஒரு அரசியல்வாதியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தும் ஒரு கதையை வெளியிட்ட பிறகு பல இன்னல்களை சந்திக்கிறார்.. மாளவிகா மோகனனும் த்ரில்லரில் கைதட்டல்-தகுதியான நடிப்பை வழங்கியுள்ளார் மற்றும் அவர்களின் கெமிஸ்ட்ரி திரையில் புதியதாக தெரிகிறது. தற்போதைய நிலவரப்படி, மாறனைப் பார்த்த திரையுலக ஆர்வலர்கள் அதற்கு ஒரு தம்ஸ்-அப் கொடுத்துள்ளனர் மற்றும் கவர்ச்சியான இசை மற்றும் ஒளிப்பதிவு ஆகியவற்றுடன் அதன் புதிரான கதைக்களத்திற்காக அதைப் பாராட்டியுள்ளனர்.

இந்த படம் குறித்து ரசிகர்களின் ட்வீட்டுகளை பார்க்கலாம்...

முதல் பாதி குறித்து பதிவிட்டுள்ள ரசிர்கள் ஒருவர் கார்த்திக் நரேன் முதல் பாதி நெருப்பு என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

மற்றோரு ட்வீட்டில் பாதி வழியில் #மாறன். இதுவரை நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. ஒரு இளம் புலனாய்வுப் பத்திரிகையாளரின் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட பக்கங்களை நாங்கள் காண்கிறோம். அண்ணன்-தங்கை கோணம் நன்றாக வேலை செய்கிறது. என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

மாறன் ஏமாற்றமளிக்கும் வகையில் சாதுவானவர்! குறைந்தபட்சம் ஜகமே சில சிறந்த காட்சிகளைக் கொண்டிருந்தது என் ரசிகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

Scroll to load tweet…

தனுஷ், ஸ்ம்ருதி காட்சிகள் நன்றாக உள்ளன. நல்ல திரைக்கதை, பாடல்கள் சரி, Gvp இசை அருமை தனுஷ் நடிப்பு செம, ஆனால் ஃப்ளாஷ்பேக் போர்ஷன் மட்டும் நெகடிவ் என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…