சமீபத்தில், பிரபுசாலமன் இயக்கத்தில், தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியாகிய தொடரி படம் தனுஷ் எதிர் பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
ஆனால் தனுஷ் மூலம் காமெடியனாக அறிமுக படுத்தப்பட்ட சிவகார்த்திகேயன் இன்று உச்ச நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகிய ரெமோ படம் மாபெரும் ஹிட் அடித்துள்ளது.
இதனால் அவரின் வளர்ச்சி தனுஷை கொஞ்சம் அச்சுறுத்தியுள்ளது என சொல்ல படுகிறது.
இதனால் , மீண்டும் தான் விட்ட மார்க்கெட்டை பிடிக்க தனுஷ் ஊர் ஊராக சுற்று தனது கொடி பட ப்ரோமோஷனில் இறங்கி உள்ளார்.
ஏற்கனவே சேலம், திருச்சி, மதுரை ரசிகர்களை சந்தித்த தனுஷ் நேற்று திருநெல்வேலியில் ரசிகர்களை சந்தித்து ப்ரோமோஷனை முடித்தார்.
