தனுஷின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில்  வடசென்னை திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரெயிலர்  தான் கோலிவுட்டில் தற்போது ஹாட் டாப்பிக். சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கும் இந்த டிரெயிலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

வடசென்னை தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் மூன்றாவது திரைப்படம். ஏற்கனவே பொல்லாதவன், ஆடுகளம் என இரண்டு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் இந்த ஜோடிக்கு இது மூன்றாவது திரைப்படம். வடசென்னை திரைப்படத்தை மூன்று பாகங்களாக எடுக்கும் அளவிற்கு கதையை தயாராக்கி வைத்திருக்கும் வெற்றி மாறன், இந்த படத்திற்கு கிடைக்கு வெற்றியை பொறுத்து அடுத்தடுத்த பாகங்களை எடுக்க திட்டமிட்டிருப்பதாக முன்னரே தெரிவித்திருந்தார். 

இதனிடையே தற்போது இவர்கள் இருவரும் நான்காவது முறையாக ஒரு புதிய திரைப்படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கின்றனர் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே ஆடுகளம் ,பொல்லாதவன், வடசென்னை என தொடர்ந்து புதுமையான கதைக்களத்தில் ,வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் இந்த ஜோடி இந்த முறை ஒரு நாவலை தழுவிய திரைப்படத்தினை எடுக்கவிருக்கின்றனர் என்பது தான் இந்த நான்காவது படம் குறித்து வெளியாகி இருக்கும் புதிய தகவல் .

பிரபல எழுத்தாளர் பூமணியின் வெக்கை எனும் நாவலை அடிப்படையாக கொண்டுதான் தனுஷின் இந்த நான்காவது திரைப்படம் இயக்கப்பட இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.  இந்த வெக்கை நாவலை சுமார் பதினைந்து ஆண்டுகளாக பல்வேறு இயக்குனர்கள் திரைப்படமாக்கும் முயற்சி இறங்கி என்ன காரணத்தாலோ பின் வாங்கிவிட்டார்கள்.

இம்முறை வெற்றிமாறனால் வெக்கை திரைப்படமாகிறதா  என்று பார்ப்போம்.