தனுஷுக்கு ரஜினி கட்சியில் என்ன போஸ்ட்..?!

கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக பேச்சு அடிபட்டு வருகிறது. ஆனால் செயலில் முழுமூச்சாக இல்லை என்ற கருத்து பரவலாக பேசி வந்தாலும், செய்தியாளர் ஒருவர் நடிகர் தனுஷிடம் கேள்வி எழுப்பினார். 

அதில், ரஜினி கட்சி தொடங்கினால் உங்களுக்கு என்ன பதவி என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இதற்கு பதில் அளித்த தனுஷ், "சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் நிறைய பேர் உள்ளனர்... மேலும் அடிப்படைத் தேவைகளுக்காக மக்கள் போராட வேண்டிய நிலை என்றும் வரக்கூடாது" என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து ரஜினி அரசியலுக்கு வருவாரா? அப்படி வந்தால் உங்களுக்கு என்ன பதவி என்ற கேள்விக்கு.... அது இப்போதைக்கு வேண்டாம். வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்து உள்ளார்.

இதிலிருந்து சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள... எப்போதும் தயார் என ரஜினி ஏற்கனவே தெரிவித்து இருந்த நிலையில், கண்டிப்பாக அரசியலுக்கு வரும் தருவாயில், தனுஷின் பதிலை வைத்து பார்க்கும்போது ரஜினி அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக தனுஷுக்கு பொறுப்பு இருக்கும் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.