பொருந்தா கூட்டணி அரசியலிலும் உண்டு. சினிமாவில் இன்னும் அதிகம். ஆனால் தனுஷின் வெற்றிக் கோபுரத்தில் ஜி.வி.பிரகாஷ் என்கிற செங்கல் கட்டாயம் இருக்கும். அவர்தான் பொல்லாதவன், ஆடுகளம் படங்களின் பாடல்கள் தனுஷின் படங்களுக்கு மேலும் ஒரு பூஸ்ட் அப் என்ற நிலையை மாற்ற தனுஷாலும் முடியாது. அப்படியிருக்க... நடுவில் புட்டுக்கொண்டது நட்பு. எப்படியோ இதை மீண்டும் ஒட்ட வைத்தார் வெற்றிமாறன்.

 

‘அசுரன்’ படத்தில் மீண்டும் இணைந்த வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி மேலும் ஒரு வெற்றியை விதைத்தது. தற்போதைய நிலவரமே வேறு. தனிப்பட்ட நட்புக்குள் மீண்டும் தெர்மா மீட்டர் வெடிக்கிற அளவுக்கு சூடு. கூட்டணியை தொடரக் கூடாது என்று முடிவெடுத்து இருக்கிறாராம் தனுஷ். வழக்கம் போல அந்த இடத்தை நிரப்ப அனிருத் குதித்திருக்கிறார். மெலடியை மிதிக்கறதே இரைச்சலுக்கு வேலையாக போயிற்று. 

tha