நடிகர் தனுஷின் D44 படத்தின் பூஜை இன்று காலை போடப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தின் டைட்டில் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு செம்ம மாஸ் டைட்டிலை படக்குழு தேர்வு செய்துள்ளது. 

நடிகர் தனுஷின் D44 படத்தின் பூஜை இன்று காலை போடப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தின் டைட்டில் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு செம்ம மாஸ் டைட்டிலை படக்குழு தேர்வு செய்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

‘அசுரன்’, ‘கர்ணன்’, ‘ஜகமே தந்திரம்’ என தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் அடுத்தடுத்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து வருகிறது. இதன் மூலம் பாலிவுட்டில் கால் பதித்த தனுஷ், ஹாலிவுட்டிலும் தடம் பதித்து விட்டார். ‘அவெஞ்சர்ஸ்’ பட இயக்குநர்களான ஆந்தோனி ரூஸோ மற்றும் ஜோயி ரூஸோ சகோதரர்கள் இயக்கி வரும் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்த தனுஷ், தற்போது தமிழில் அடுத்தடுத்து காமிட்டாகியுள்ள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

சமீபத்தில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வரும் மாறன் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷ் நிருபராக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் #D44 படம் குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. 

இன்று காலை இந்த படத்தின் பூஜை போடப்பட்டது. மித்ரன் ஜவஹர் தனுஷை வைத்து 4 ஆவது முறையாக கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷ் எழுதியுள்ளார். மேலும் டி.என்.ஏ. என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தனுஷ் மற்றும் அனிருத் 6 ஆண்டுகளுக்குப் பிறகு #D44 படம் மூலமாக ஒன்றிணைந்துள்ளனர். இந்த படத்தில் இயக்குநர் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. 

அதனைத் தொடர்ந்து தனுஷ் உடன் பிரபல நடிகைகளான ராஷி கண்ணா, ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் நித்யா மேனன் முதன் முறையாக இணைந்து நடிக்க உள்ளனர். இப்படி அடுத்தடுத்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் D44 படத்தின் டைட்டில் குறித்த தகவல் கசிந்துள்ளது. மூன்று ஹீரோயின்கள் நடித்தாலும் இப்படிப்பட்ட பெயரா என பலரையும் வியக்க வைத்துள்ளது இந்த தகவல்.

அதாவது இந்த படத்திற்கு 'திருச்சிற்றம்பலம்' என பெயரிடப்பட்டுள்ளது. திருச்சிற்றம்பலம் என்பது தமிழ் சைவ சமய நூல்களில் தவிர்க்கமுடியாத சொல்லாக உள்ளது, சிதம்பர நாதர் அந்த தில்லை நடராஜனையும் இந்த புனித சொல் குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.