"அசுரன்" படத்தின் மாஸ் வெற்றியைத் தொடர்ந்து, துரை செந்தில்குமார் இயக்கத்தில் "பட்டாஸ்" படத்தை நடித்து முடித்துவிட்டார் தனுஷ். அப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது. இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் "டி40" படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வருகிறது.

மதுரையில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீழக்குடியில் தனுஷ் மற்றும் நாயகி சஞ்சனாவிற்கு திருமணம் நடைபெறுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் எடுத்த பேட்ட பட பிளாக்பேக் காட்சியில் ரஜினி பெரிய மீசை வைத்திருப்பார், அதேபோன்ற மீசையுடன் தனுஷ் இந்த படத்தில் நடித்திருக்கிறார். தனுஷின் இந்த கெட்டப்பும் பிளாஷ்பேக் காட்சி தான் என்று கூறப்படுகிறது.  

தனுஷ் திருமண பாடல் காட்சிகளை படக்குழு ஷூட் செய்துள்ளது. இதற்காக செட்டில் வைக்கப்பட்டிருந்த தனுஷ், சஞ்சனா திருமண பேனர்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. மதுரைக்காரர்கள் பாசக்காரர்கள் என்பதால் கல்யாணத்திற்கு ஏகப்பட்ட பேனர்கள் வைப்பது வழக்கம். அதற்காக டி40 படப்பிடிப்பின் போது, கார்த்திக் சுப்பராஜ் வைத்த பேனர்கள் எப்படியோ சோசியல் மீடியாவில் வெளியாகிவிட்டது. 

மேலும் அப்பாடலில் பேட்ட கெட்டப்பில்  ஊர்வலம் வரும் மாப்பிள்ளை தனுஷ், உறவினர்களுடன் சேர்ந்து ஆடும் நடனமும் சோசியல் மீடியாவில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது. அந்த வீடியோ இதோ....