நீண்ட காலமாக படங்களில் நடிக்காவிட்டாலும், இன்றைய இண்டர்நெட் தலைமுறையின் மீம்ஸ் நாயகனாக வலம் வருபவர் வைகை புயல் வடிவேலு, புயல், மழையில் இருந்து அரசியல் கட்சி தலைவர்களின் ஸ்பீச் வரை நம்ம காமெடி மன்னன் கிட்ட ரகரகமாக ரியாக்‌ஷன்ஸ் இருக்கு. அதை வச்சி மீம்ஸ் கிரியேட்டர் செய்யும் மாம்ஸ்கள் புகுந்து விளையாடி வருகின்றனர். 

துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்த படம் பட்டாஸ். இந்த படம் பொங்கல் விருந்தாக வெளியானது. இந்த படத்தில் அப்பா, மகன் என இரு வேறு கதாபாத்திரங்களில் பட்டையை கிளப்பியிருப்பார் தனுஷ். அப்பா தனுஷுற்கு சினேகாவும், மகன் தனுஷுற்கு மெஹரினும் ஜோடியாக நடித்திருந்தனர்.  அந்த படத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த பாடல் "சில் ப்ரோ" தனுஷுன் செம்ம ஆட்டம் போட்ட அந்த பாட்டிற்கு வடிவேலு நடனமாடினால் எப்படியிருக்கும் என்ற கற்பனை நெட்டிசன்களுக்கு உதித்துள்ளது. 

இதையும் படிங்க: கவர்ச்சி கதகதப்பால் நீச்சல் குளத்தை சூடேற்றிய பிபாஷா பாசு... கணவருடன் டூபிஸில் கும்மாளம்...!

என்னாது, சில் ப்ரோ பாடலுக்கு வடிவேலு டான்ஸ் ஆடினாரா, இது எப்பொழுது நடந்தது, நான் பார்க்கலையேன்னு உடனே பரபரப்பாகிடாதீங்க. எந்த பாடல் வந்தாலும் அதன் வடிவேலு வெர்ஷன் வரும் அல்லவா. அப்படித் தான் சில் ப்ரோவுக்கு ம் வடிவேலு வெர்ஷன் வந்துள்ளது.

இதையும் படிங்க: சீமான் ஆட்கள் கேவலமா பேச நீங்களும்தான் காரணம்... பார்த்திபனை பஞ்சாயத்துக்கு கூப்பிடும் விஜயலட்சுமி...!

சும்மா சொல்லக் கூடாது வடிவேலு எப்பொழுதோ போட்ட ஸ்டெப்ஸுகள் சில் ப்ரோ பாடலுக்கு அவ்வளவு பொருத்தமாக உள்ளது. இந்த வீடியோவை தனுஷே பார்த்தாலும் கூட கோபப்பட மாட்டார், விழுந்து விழுந்து சிரிப்பார். அப்படி அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.