ப்ரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி, இவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக புகார் கூறி வந்தார். இதனிடையே சீமானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டார். சீமானுக்கு விஜயலட்சுமி கேக் ஊட்டி விடுவது போன்ற புகைப்படங்கள் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது. 

இதனிடையே,  சீமான் தனது ஆதரவாளர்களை விட்டு தன்னை மிரட்டி வருவதை நிறுத்தாவிட்டால் ஒவ்வொரு ரகசியங்களை வெளிப்படுத்திவிட்டு எனது சாவுக்கு காரணம் சீமான் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றும் மிரட்ட ல் விடுத்திருந்தார். 

இதுபற்றி சீமானிடம் கேட்ட போது இதுபோன்ற கேவலங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என சைடு கேப்பில் நழுவினர். இதையடுத்து சீமான் கட்சியைச் சேர்ந்த காளியம்மாள் என்பவர் தன்னை பற்றி தரக்குறைவாக பேசியதாக விஜயலட்சுமி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் பார்த்திபனுடன் சூரி என்ற படத்தில் விலைமாதுவாக நடித்ததாகவும், அதை சுட்டிக்காட்டி மாரியம்மாள் தன்னை அவமதிப்பதாகவும் குமுறியுள்ளார். நடிகர் பார்த்திபன் கொடுத்த ஊக்கத்தில் தான் அந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், உங்களுக்கு என்னைப் பற்றி தெரியும் சீமானுக்கு பயப்படாமல் எனக்காக குரல் கொடுங்கள் என்று கோரிக்கைவிடுத்துள்ளார். 

இதற்கு முன்னதாக வெளியான வீடியோவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கோரிக்கைவிடுத்திருந்த விஜயலட்சுமி, இந்த வீடியோவில் ஒட்டுமொத்த திரையுலகையே சப்போர்ட்டிற்கு அழைத்துள்ளார். நடிகையான தன் மீது சீமான் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவதூறு பரப்புவது குறித்து திரைத்துறையினர் கேள்வி எழுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். 

இறுதியாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும், அவரது கட்சியைச் சேர்ந்தவர்களும் தன்னை கேவலப்படுத்தி வருவதற்கு மன்னிப்பு கேட்கும் வரை எனது போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் விஜயலட்சுமி.