மதுரையைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர்,  15 வயதில் தொலைந்துபோன தன்னுடைய மகன் தான் தனுஷ் என்றும், அவர்தான் தங்களின் பராமரிப்பு செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெற்று வரும் நிலையில், தனுஷ் தான் கதிரேசன் - மீனாட்சி தம்பதிகளின் பிள்ளை இல்லை, என்பதற்கான ஆதாரத்தை உயர் நீதிமன்றத்தில் சமர்பித்தார். இதை ஏற்றுக்கொண்டு விசாரித்த நீதிமன்றம், தனுஷ் தன்னுடைய தரப்பில் இருந்து, கஸ்தூரிராஜாவின் மகன் என்பதற்கான ஆதாரத்தை சமர்பித்தாததால், இந்த வழக்கு தள்ளுபடி செய்தது.

இதை தொடர்ந்து தனுஷ் தாக்கல் செய்த ஆதாரங்கள் அனைத்தும், போலியானவை என்றும் மீனாட்சி - கதிரேசன் தம்பதியினர் போலீசில் புகார் செய்தனர்.  இதனால் மீண்டும், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். 

மேலும், தமிழகத்தில் இந்த வழக்கு நடைபெற கூடாது என்றும், வேறு மாநில கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என அறிவுறுத்தினர். இந்நிலையில் இந்த மனு நேற்று நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த அவர்,  அடுத்த வாரம் தீர்ப்பு அளிப்பதாக அறிவித்தார். இதனால் தனுஷ் மீதான வழக்கு தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

தொடர்ந்து பல ஆண்டுகளாக தன்னுடைய மகன் தனுஷ் என போராடி வரும் கதிரேசன் - மீனாட்சி தம்பதிகளின் பாச போராட்டத்திற்கு, அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ள தீரவிப்பு ஒரு தீர்வாக அமைய வாய்ப்புள்ளது.