2022ம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் வெளியான "சாணி காகிதம்" திரைப்படத்தை இயக்கியதும் அவர்தான்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தற்பொழுது பரபரப்பாக உருவாகி வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இலங்கை விடுதலைப் புலிகளின் ராணுவத்தில் இருந்த "கேப்டன் மில்லர்" என்று அழைக்கப்படும் ஒரு போராளியின் கதையை தழுவி இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மாபெரும் போராளியான அந்த கேப்டன் மில்லரின் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் தனுஷ் நடித்துள்ளார். தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பிரம்மாண்டமான முறையில் நடந்து 
வருகின்றது. 

இதையும் படியுங்கள் : சத்தமில்லாமல் ரெடியாகும் ஐந்து படங்கள்.. மாஸ் காட்டும் ஹரிஷ் கல்யாண்!

தற்போது கேப்டன் மில்லர் பட குழு வெளியிட்டுள்ள தகவலின் படி நாளை மாலை 5 மணிக்கு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறது. ஆனால் அதை அறிவிக்க அவர்கள் ஒரு போஸ்டரை தற்பொழுது வெளியிட்டுள்ளனர், அந்த போஸ்டரே வெளித்தனமாக இருக்கிறது என்று தனுஷ் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். 

இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தற்பொழுது தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். வசந்த் ரவி நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான "ராக்கி" என்ற திரைப்படத்தை இயக்கியது அருண் மாதேஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது, அதன் பிறகு 2022ம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் வெளியான "சாணி காகிதம்" திரைப்படத்தை இயக்கியதும் அவர்தான். 

இந்நிலையில் அவர் இயக்கி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் திரைப்படத்தில் தனுஷ், பிரியங்கா அருள் மோகன், கன்னட உலகின் மாபெரும் நடிகரான சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், மூத்த நடிகர் நாசர் மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள் : மிரட்ட வரும் சந்திரமுகி 2 - லைகா வெளியிட்ட சூப்பர் அப்டேட்!