அந்த படத்தில் வரும் வடிவேலுவின் நகைச்சுவைக்கு இன்றளவும் ரசிகர் கூட்டம் உண்டு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரையுலக பயணத்தில் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படங்கள் பல இருக்கின்றது. அவை அத்தனையுமே அவருடைய ஸ்டைல் மற்றும் சுறுசுறுப்பான நடிப்புக்காக ஹிட்டான திரைப்படங்கள் என்றால் அது மிகையல்ல.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆனால் சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு 2005ம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் வெளியான "சந்திரமுகி" என்ற திரைப்படம் பெரிய அளவில் சூப்பர் ஸ்டாருடைய ஸ்டைல் இல்லாமல் வெளியான திரைப்படம். ஆனால் அவருடைய திரை வரலாற்றில் மாபெரும் வசூலை கண்ட படங்களில் அதுவும் ஒன்று. 

இதையும் படியுங்கள் : இனி நான் நடிக்க வாய்ப்பில்லை மீண்டும் அடித்து கூறிய உதயநிதி..!

கடந்த 1993ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான "மணிசித்ரதாழு" என்ற திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் சந்திரமுகி திரைப்படம். அந்த படத்தில் வரும் வடிவேலுவின் நகைச்சுவைக்கு இன்றளவும் ரசிகர் கூட்டம் உண்டு. இந்நிலையில் சுமார் 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை வாசு, பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களை வைத்து இயக்கியுள்ளார். 

இந்த திரைப்படத்தில் சந்திரமுகியாக கங்கானா ரனாவத் நடிக்க, முக்கிய வேடங்களில் வடிவேலு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகிற "விநாயகர் சதுர்த்தி" திருநாள் அன்று வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தற்போது தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த படத்தில் இருந்து ஒரு போஸ்டர் ஒன்றையும் அந்த நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : மாமன்னன் எப்படி இருக்கு? - திரைவிமர்சனம் இதோ!