MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'மாமன்னன்' பூர்த்தி செய்துவிட்டது..! இனி நான் நடிக்க வாய்ப்பில்லை மீண்டும் அடித்து கூறிய உதயநிதி..!

'மாமன்னன்' பூர்த்தி செய்துவிட்டது..! இனி நான் நடிக்க வாய்ப்பில்லை மீண்டும் அடித்து கூறிய உதயநிதி..!

உதயநிதி நடித்துள்ள 'மாமன்னன்' திரைப்படம் இன்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், இனி நான் நடிக்க வாய்ப்பில்லை என்பதை மீண்டும் உறுதி படுத்தியுள்ளார் உதயநிதி. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Jun 29 2023, 07:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், தமிழகத்தில் மட்டும் சுமார் 600 திரையரங்குகளில் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் 'மாமன்னன்'. 
 

25

இப்படம் குறித்து, 'மாமன்னன்' ஆடியோ லான்சில் பேசிய, இயக்குனர் மாரி செல்வராஜ், இதுவரை தான் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் ஆகிய படங்களை தேவர் மகன் படத்தை பார்த்து தான் எடுத்தேன் என்றும், தேவர் மகன் படத்தில் வரும் இசக்கி கதாபாத்திரம் தான் மாமன்னன் படத்தில் நடித்துள்ள வடிவேலுவின் கேரக்டர் என பேசி இருந்தார்.

பிரபல பாடகிக்கு ICU-வில் தீவிர சிகிச்சை! உடல் நிலை கவலைக்கிடம்..? அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!
 

35

இவர் பேசியது சில சர்ச்சைகளுக்கு வித்திட, 'மாமன்னன்' படத்தை தடை செய்ய வேண்டும் என சிலர் நீதி மன்றம் வரை சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் மாரி செல்வராஜுக்கு ஆதரவாகவும் பலர் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். நீதி மன்றமும் இப்படத்திற்கு தடை விதிக்ககூறிய வழக்கை விசாரணை செய்து, தள்ளுபடி செய்தது. மேலும் ஒரு சில திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது.
 

45

'மாமன்னன்' படத்தின் கதாநாயகன் உதயநிதி, அமைச்சர் பதவி ஏற்றதும் சினிமாவை விட்டு விலக முடிவெடுத்துள்ளதாக கூறியது மட்டும் இன்றி , மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 'மாமன்னன்' படம் தான் தன்னுடைய கடைசி படம் என கூறினார். உதயநிதி ஸ்டாலின் கடைசியாக நடித்த திரைப்படம் தான் மாமன்னன். இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க இருந்த படத்தில் இருந்தும் விலகியதாக அறிவித்தார்.

என் அம்மா முன்னாடியே அட்ஜஸ்ட்மென்ட் பற்றி அசிங்கமா கேட்டாங்க! குமுறும் ஜீ தமிழ் சீரியல் ஹீரோயின் ஸ்வாதி ஷர்மா!

55

இந்நிலையில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியான 'மாமன்னன்' படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'மாமன்னன்' படத்தை ரசிகர்களுடன் பார்த்த உதயநிதி, செய்தியாளர்களிடம் பேசும் போது, மாமன்னன் திரைப்படம் என்னுடைய விருப்பத்தை பூர்த்தி செய்துவிட்டது. எனவே   இனி நான் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பில்லை என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved