ஹீரோ என்பவர் கடவுளுக்கு நிகரானவர் என்கிற எண்ணம் அதிகரிக்க அதிகரிக்க தொல்லைகள் அதிகமாகி வருகிறது. இந்த கொடுமையை அனுபவிக்கும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வாயை மூடிக் கிடக்கிறார்கள். வட்ட வடிவில் தோசை ஊற்றினாலும், அது வகை தொகையில்லாத கொத்து பரோட்டாவாக மாறினால், அந்த கிச்சனும் தோசைக்கல்லும் சிம்புவுக்கு சொந்தமானது என்று புரிந்து கொள்ள வேண்டியதுதான். 

இடையில் அந்த சிம்பு உசிரோட இல்ல. இப்ப வேற சிம்பு பொறந்துட்டான்’என்று அவரே வந்து சத்தியம் செய்தார். அப்படியெல்லாம் இருக்காது? என்று சந்தேகப்படுகிற அளவுக்கு இருக்கிறது அவரது தற்போதைய நடவடிக்கைக்கள். இருந்தாலும் சிம்பு இப்போது சின்சியர் ஹீரோ. அதிகாலை ஆறு மணி ஷுட்டிங்கை கூட அவரை நம்பி வைக்கலாம் என்கிற அளவுக்கு உடம்பும் மனசும் அவரது சொல்பேச்சு கேட்க ஆரம்பித்துவிட்டது என புகழ்ந்தவர்கள் தங்களது வார்த்தைகளை வாபஸ் பெற்று வருகின்றனர்.

இப்படி அதிக தொல்லை தரும் ஹீரோ யாரென்று விவாதம் வைத்தால், கோடம்பாக்கமே கூட்டமாய் வந்து சிம்புவை தேர்ந்தெடுக்கும். ஆனால் அவரே பரவாயில்லை என்கிற அளவுக்கு மாறி விட்டது நிலைமை. 

அந்த இடத்தை இப்போது பிடித்திருப்பவர் தனுஷ் என்கிறார்கள். காலை பதினொன்றரைக்குதான் படப்பிடிப்புக்கே வருகிறாராம். இதை கூட பொறுத்துக் கொள்ளலாம். பட்டாஸ் படத்திற்கு டப்பிங் பேச வராமலும், ஷுட்டிங் சவுகர்யங்கள் என்று அவர் கொடுத்த லிஸ்ட்டும் படு பயங்கரம் என்கிறார்கள்.