நடிகர் தனுஷ் அறிமுகமானதில் இருந்து இப்போது வரை, அவரது சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை தமிழ் மீடியாக்களை  தான் சேரும். அவர் நடிகர் என்பதை தாண்டி, பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என படிப்படியாக முன்னேறியபோது அவரை ஊக்குவித்ததும் மீடியாக்கள் தான்.

இந்நிலையில் நாளை, இவர் நடித்த "வேலை இல்லா பட்டதாரி 2 " திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட் நடிகை கஜோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். சவுந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்திற்கு பின் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

வேலை இல்லா பட்டதாரி படத்தின் முதல் பாகம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகமான இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்த்து இருந்து வருகிறது. தமிழ் மற்றும் இன்றி தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் ஒரே சமயத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

இந்நிலையில் தமிழில் அதிகமாக இந்த படத்தின் ப்ரோமோஷன்களில் கலந்து கொள்ளாத தனுஷ். ஆந்திரா, மலேசியா, மற்றும் மும்பை போன்ற இடங்களில் அதிகமாக இந்த படத்தின் ப்ரோமோஷன்களில்  கலந்து கொண்டதாக கூறப்படுத்திறது. இதன் காரணமாக தனுஷ் தமிழ் மீடியாக்களை ஒதுக்குகிறார் என்கிற ஒரு கருத்து நிலவி வருகிறது.

சமீபத்தில் கூட பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது, திடீர் என கோபம் கொண்டு அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பின்னர் அவரை சமாதானம் செய்த பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.