"நம்ம வீட்டு பிள்ளை" வெற்றியைத் தொடர்ந்து, இரும்புத்திரை புகழ் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் "ஹீரோ" படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சத்தமே இல்லாமல் தனுஷுக்கு போட்டியாக களம் இறங்கியுள்ளார் நம்ம சிவகார்த்திகேயன். 

இதையும் படிங்க: கடும் மோதலில் ரஜினி - தனுஷ்... படாதபாடு படும் ரசிகர்கள்... சிக்கித் தவிக்கும் யூ-டியூப்...!

"ஹீரோ" படத்தை தயாரித்த கே.ஜி.ஆர்.பிலிம்ஸ், சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து அடுத்த பட தயாரிப்பில் இறங்கிவிட்டனர். அந்தப் படத்திற்கு "டாக்டர்" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். "ரெமோ" படத்தை தொடர்ந்து, "டாக்டர்" படத்திற்கு ராக் ஸ்டார் அனிரூத் இசையமைக்கிறார். அனிரூத்தின் அதிரடி இசையில் வெளியான படத்தின் தலைப்பு, சிறிது நேரத்திலேயே இந்திய அளவில் டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.இந்தப்படத்தை "கோலமாவு கோகிலா" பட இயக்குநர் நெல்சன் இயக்க உள்ளார்.  

இதில் எங்கு தனுஷுடன் சிவகார்த்திகேயன் போட்டி போட்டார் என்று கேட்குறீங்களா?. ஏற்கெனவே "டாக்டர்ஸ்" என்ற படத்தில் தனுஷ் நடிப்பதாக இருந்தது, தற்போது அந்த படத்தின் டைட்டிலை கைப்பற்றியுள்ள சிவகார்த்திகேயன் "டாக்டர்" என மாற்றிப் பயன்படுத்தியுள்ளார். மேலும் நேற்று தனுஷுன் பட்டாஸ் படத்தின் பர்ஸ்ட் சிங் வெளியாகி ட்விட்டரில் ட்ரெண்டாகி வந்தது, இந்த சமயத்தில் சிவகார்த்திகேயன் தனது டாக்டர் பட தலைப்பை மியூசிக் உடன் வெளியிட்டு ட்விட்டரில் இடம் பிடித்துவிட்டார்.