நடிகர் தனுஷ் பாலிவுட்டில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடித்துள்ள தேரே இஷ்க் மே என்கிற இந்தி படத்தின் டீசர் இன்று சர்ப்ரைஸாக வெளியிடப்பட்டுள்ளதால் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

Dhanush Tere Ishk Mein Teaser : இயக்குநர் ஆனந்த் எல் ராயின் 'தேரே இஷ்க் மே' படம் பல நாட்களாகவே தயாரிப்பில் இருந்து வருகிறது. இதில் முதல் முறையாக தென்னிந்திய சூப்பர் ஸ்டார் தனுஷுடன் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் ஜோடி சேர்கிறார். இதற்கிடையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் படத்தின் டீசர் வீடியோவை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் மிகவும் பயங்கரமாகவும், சிலிர்க்க வைப்பதாகவும் உள்ளது. இதில் தனுஷின் ஆக்ரோஷமான தோற்றம் இடம்பெற்று உள்ளது. இப்படத்தை பூஷன் குமார் தயாரித்துள்ளார், மேலும் இது டி-சீரிஸ் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி வெளியாகிறது.

'தேரே இஷ்க் மே' டீசரில் என்ன இருக்கிறது?

தனுஷ் மற்றும் கீர்த்தி சனோனின் 'தேரே இஷ்க் மே' படத்தின் டீசர் வீடியோவை டி-சீரிஸ் ஃபிலிம்ஸ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது. 2 நிமிடம் 4 வினாடிகள் கொண்ட இந்த டீசரின் தொடக்கத்தில், கீர்த்தி சனோனுக்கு திருமணம் நடக்கவிருப்பதும், மஞ்சள் பூசும் சடங்கு நடப்பதும் காட்டப்படுகிறது. அப்போது காயமடைந்த தனுஷ் அங்கு வருகிறார். அவர் கோபமாக, 'என் அப்பாவை எரிக்க வாரணாசி சென்றிருந்தேன். உனக்காக கங்கை நீர் கொண்டு வரலாம் என்று நினைத்தேன். புதிய வாழ்க்கையைத் தொடங்கப் போகிறாய், பழைய பாவங்களைக் கழுவிக்கொள்' என்கிறார்.

இதற்குப் பிறகு, டீசரில் கீர்த்தி மற்றும் தனுஷின் தீவிரமான காதல் கதையின் ஒரு பார்வை காட்டப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே காதல், மோதல் மற்றும் இறுதியில் பழிவாங்கல் ஆகியவை காணப்படுகின்றன. டீசரைப் பார்க்கும்போது, ​​இயக்குநர் ஆனந்த் எல் ராய் இந்த முறை ஒரு தீவிரமான காதல் கதையுடன் வருகிறார் என்று யூகிக்க முடிகிறது. டீசரின் முடிவில் தனுஷின் ஒரு வசனம் உள்ளது - 'அந்த ஈஸ்வரன் உன் வயித்துல ஒரு பையன கொடுக்கட்டும், அப்பதான் உனக்கு புரியும், காதலில் செத்துப்போறவன் யாரோ ஒருத்தரோட புள்ள தான்னு' என அவர் எமோஷனலாக பேசுகிறார்.

தனுஷ் மற்றும் கீர்த்தி சனோனின் 'தேரே இஷ்க் மே' படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து ரசிகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.