நடிகர் தனுஷ், இதுவரை நடித்திராத மிகவும் வித்தியாசமான கெட்டப்பில், இரட்டை வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் 'அசுரன்'. இந்த படத்தை தனுஷின் ஆஸ்தான இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார், கலைப்புலி தாணு இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த படம், அக்டோபர் 4 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில், சரியாக 6 :20 மணிக்கு இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.  

ட்ரைலர் காட்சியில் தனுஷ் மிகவும் ஆக்ரோஷ முகத்துடன் தோன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதே போல் ஒரு சில காட்சிகளில், தமிழில் முதல் முறையாக தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் மஞ்சு வாரியார் வந்து செல்கிறார். ட்ரைலரில் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும், ரசிகர்கள் மனதில் பதியும் வண்ணம் உள்ளது. மேலும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஆடுகளம் நரேன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக இந்த ட்ரைலரின் கடைசியில் நம்ம கிட்ட காடு இருந்த வாங்கிப்பானுங்க, காசு இருந்த புடிங்கிப்பானுக... படிப்ப மட்டும் யாராலயும் வாங்கிக்க முடியாது என தனுஷ் கூறும் வார்த்தை, நச் என மனதில் பதிகிறது.

இரட்டை வேடத்தில் தோன்றி தனுஷ் மாஸ் காட்டும் ட்ரைலர் இதோ...