சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின், மருமகனான நடிகர் தனுஷ் தமிழ் திரையுலகை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்.

இவருக்கு நீண்ட வருடங்களாகவே, தன்னுடைய மாமனார் ரஜினிகாந்துடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது தான். ஏற்கனவே இவர் தயாரித்த 'காலா' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தனுஷ் நடிப்பதாக கூறப்பட்டது.

ஆனால் அந்த கதாபாத்திரம், மிகவும் சிறிய கதாபாத்திரம் என்பதால் இந்த படத்தில் வேண்டாம் என்றும், வேறு ஏதேனும் படத்தில் இருவரும் இணைந்து நடிக்கலாம் என ரஜினி சொல்லி விட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாகவே ரஜினி மற்றும் தனுஷ் இணைந்து நடிக்க உள்ள படத்தின் கதை தயாராகிவிட்டதாகவும்,  விரைவில் இவர்கள் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாகவும்  தகவல் வெளியானது.

இது குறித்து பிரபல நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள தனுஷ் , இது முற்றிலும் வதந்தி என தெரிவித்துள்ளார்.  மேலும் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தன்னுடைய நீண்ட வருட ஆசை என்பது உண்மைதான்.  ஆனால் இது குறித்த கதை மற்றும் படம் இன்னும் முடிவாகவில்லை,  இதுபோல் வெளிவரும் தகவல்களை நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.  இதிலிருந்து ரஜினி மற்றும் தனுஷ் நடிக்க உள்ள படம் தற்போதைக்கு ஆரம்பமாகவில்லை என்பது தெரிய வந்துள்ளது.