லண்டனில் கார்த்திக் சுப்பாராஜ் படத்தின் நீண்ட ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை திரும்பியிருக்கும் தனுஷ் தனது குடும்பத்தினருடன் பொழுதைக் கழிக்கும் புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சஷிகாந்தின் ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பாராஜ் தனுஷ் இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு லண்டனில் துவங்கியது. இதன் படப்பிடிப்பு ஒரே ஷெட்யூல் என்ற முன்னரே முடிவு செய்ப்பட்டதால் ‘அசுரன்’பட ட்ப்பிங்கையும் லண்டனிலிருந்தே பேசி அனுப்பினார் தனுஷ்.

இந்நிலையில் 64 நாட்கள் நான்ஸ்டாப்பாக நடந்த ‘தனுஷ் 40’என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன்பு முடிந்தது. அடுத்து மாரி செல்வராஜின் ‘கர்ணன்’படத்தில் கலந்துகொள்ளவிருக்கும் தனுஷ் நடுவில் கிடைத்த சில தினங்களை தனது குடும்பத்தினருடன் கொண்டாட முடிவு செய்து, அவர்களுடன் கலகலப்பாக நேரத்தை செலவு செய்தார். இக்கொண்ட்டாட்டத்தில் அவரது அண்ணன் செல்வராகவன் குடும்பத்தினரும், தனுஷின் குழந்தைகளும் இடம்பெற்றிருக்கும் படங்கள் தற்போது வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. மாரி செல்வராஜ் படம் முடிந்தவுடன் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.