பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன்  தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரைப்படத்துறையில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஏராளமான ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்றார். இவரின் கலைச்சேவையை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு அவருக்கு பத்ம விருதுகளை வழங்கியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய திரைப்படத்துறையின் மிகவும் உயரிய விருதான தாதா சாகேப்பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு பழம் பெரும் பாலிவுட் நடிகர்கள் திலீப்குமார், சசிகபூர், உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளார். தமிழகத்தில் நடிகர் சிவாஜி கணேசன் கடந்த 1996 ஆம் ஆண்டும், இயக்குனர் பாலச்சந்தர் 2010 ஆம் ஆண்டும் இந்த விருதினை பெற்றுள்ளனர்.

தாதா சாகேப் விருதுக்கு அமிதாப் தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து அவருக்கு பாலிவுட் பிரபலங்கள், பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்