deivamagal gayatri next acting nanthini seriyal
தெய்வமகள்:
சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான விறுவிறுப்பான தொடர் 'தெய்வமகள்'. இந்த சீரியல் மூலம் அறிமுகமான விமான பணிப்பெண் வாணி போஜன் பலருக்கும் பிடித்த நாயகி. இவரை பார்க்கவே பல இளைஞர்கள் இந்த சீரியலை தொடந்து பார்த்து வந்தனர். 
அதே போல இந்த சீரியலில் நெகடிவ் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த கன்னட நடிகை ரேகாவுக்கும் தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இந்த சீரியலில் காயூ டார்லிங் செய்த வேலைகளுக்காக, இது நடிப்பு என்பதை பொதுமக்கள் பலர் மறந்து நேரடியாக கூட இவரை விமர்சித்து திட்டியுள்ளனர். அந்த அளவிற்கு மிகவும் இயல்பாக தன்னுடைய வில்லி கதாப்பாத்திரத்தை வெளிபடுத்தியவர் ரேகா.
தெய்வமகள் சீரியலுக்கு முற்று புள்ளி:
ஜவ்வு மிட்டாய் போல பல வருடமாக இந்த சீரியலை இழுந்து வந்தது போதும் என ஒரு வழியாக காயத்திரி அண்ணியாரை கொலை செய்து சாகடித்து இந்த சீரியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர் குழுவினர்.
மீண்டும் வந்த அண்ணியார்:
இந்த சீரியலில் செத்தாலும், மீண்டும் வந்து மிரட்டுவேன் என்பது போல, இயக்குனர் சுந்தர் சி இயக்கி வரும் பிரமாண்ட தொடரான 'நந்தினி' சீரியலில் கதாநாயகியை அழிக்க துடிக்கும் மந்திரவாதி கதாப்பதிரத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார் ரேகா.
இதனால் இனி காயூ டார்லிங்கின் மிரட்டல் நடிப்பை ரசிகர்கள் நந்தினி சீரியலில் பார்க்கலாம்.
