பாலிவுட் திரையுலகில் கூட, கண்டமேனிக்கு தன்னிடம் வரும் கதைகள் அனைத்திலும் நடிக்காமல், கதைகளை கவனமாக தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகை தீபிகா படுகோன். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து,திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது, பாகுபலி பட நாயகன் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க உள்ள தகவல் அதிகார பூர்வமாக வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: 8 வயதில் கிரிக்கெட் வீரரால் மாதவன் சந்தித்த அவமானம்..! மோசமான அனுபவத்தால் வந்த பழக்கம்! போட்டுடைத்த நடிகர்!
 

நடிகை தீபிகா படுகோன், இதற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடித்த 3 டி அனிமேஷன் படமான ‘கோச்சடையான்’ திரைப்படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து தற்போது பாலிவுட் நடிகர்,அல்லாத நடிகரான பிரபாஸுடன் நடிக்க உள்ளார். எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் இப்போதே ரசிகர்கள் மனதில் எட்டிப்பார்க்க துவங்கிவிட்டது.

பாகுபலி படத்தின் மூலம் உலகப் புகழ்பெற்ற நடிகராக மாறிவிட்ட  பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளியான 'சாஹே' திரைப்படம் படுதோல்வியை தழுவியது. இதை தொடர்ந்து,   ‘ராதே ஷ்யாம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் தயாராகவுள்ள இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி படு வைரலாகியது.

மேலும் செய்திகள்: மது அருந்தியபடி... உச்ச கவர்ச்சியில் தொடையை தாராளமாக காட்டி மிரட்டல் போஸ் கொடுத்த அமலாபால்!
 

இந்த நிலையில் பிரபாஸ் நடிக்கவுள்ள ‘பிரபாஸ் 21’ படத்தை நடிகையர் திலகம்’ இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை வைஜெயந்தி மூவீஸ் தயாரிக்கவுள்ளது என்பதும் இந்நிறுவனம் தயாரிக்கும் 50வது படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிக்கு, கொரோனா பிரச்சனை முடிந்தவுடன் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.