deepika padukone join the prabas movie
கடந்த ஆண்டு மிகப்பெரிய பொருட்செலவில் வெளியான படம் பாகுபலி 2. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ் தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி நல்ல வசூலை பெற்றதோடு மட்டுமல்லாமல் பிரபாஸுக்கு நல்ல பெயரையும் வாங்கித் தந்தது. மேலும் அவரை உலகளவில் புகழ் பெறவும் செய்தது.
இந்நிலையில் தற்போது பிரபாஸ் "சாஹோ" என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் அருண் விஜய், ஜாக்கி ஷெராப், மந்த்ரா பேடி, நீல் நிதின் முகேஷ் போன்றோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தை தொடர்ந்து மற்றொரு ஹிந்தி படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். மூன்று வருடத்திற்கு முன்பே பிரபாஸ் இந்த படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படம் தொடங்கவில்லை.
தற்போது பாகுபலி 2 மாபெரும் வெற்றி அடைந்துள்ளதால் இந்த படத்தின் வேலைகள் தொடங்கியுள்ளன. இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க, பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பல கட்ட தடைகளுக்கு பின் ஒரு வழியாக தீபிகா நடித்த "பத்மாவத்" திரைப்படம் வருகிற 25 ம் தேதி வெளியாகிறது.
