Deepika Padukone : படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு நடிகை தீபிகா படுகோனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த பின் அவரது உடல்நலம் தேறி உள்ளது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் தற்போது நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அப்போது நடிகை தீபிகா படுகோனேவுக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு நடிகை தீபிகா படுகோனே காமினேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த பின் அவரது உடல்நலம் தேறி உள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நடிகை தீபிகா படுகோனே அங்குள்ள நோவேட்டல் ஓட்டலில் மருத்துவர்களின் கண்காணிப்பில் ஓய்வெடுத்து வருகிறாராம்.

நடிகை தீபிகா படுகோனேவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அறிந்த ரசிகர்கள் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என சமூக வலைதளங்கள் வாயிலாக வேண்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Nayanthara : திருப்பதியில் செஞ்ச அதே வேலையை கேரளாவிலும் செய்த நயன்தாரா... தீயாய் பரவும் போட்டோஸ்